திங்கள், அக்டோபர் 03, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُونُواْ قَوَّامِينَ لِلّهِ شُهَدَاء بِالْقِسْطِ وَلاَ يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلاَّ تَعْدِلُواْ اعْدِلُواْ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ {8}

5:8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.



கலைஞரிடம் நமது கேள்வி ?

தமிழக முதல்வர் கலைஞர் கருனாநிதி அவர்கள் தமிழீழ பின்னடைவின் காரணம் குறித்து முரசொலியில் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார் அதை தட்ஸ் தமிழில் வாசித்தோம்.

பிரபாகரன் எடுத்த அவசர முடிவுகளே ஈழத் தமிழர்களுடைய எதிர்காலம் சூன்யமாகிப் போனது என்று சிலப் புள்ளி விபரங்களுடன் எழுதி இருந்தார் யாருக்கும் அதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

2003ல் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தை அவரால் புறக்கனிக்கப் பட்டது. 
2005ல் டோக்கியோவில் நடந்த பேச்சு வார்த்தை புறக்கனிக்கப்பட்டது என்று புள்ளி விபரத்துடன் தேதி வாரியாக எழுதி இருந்தார். 

அத்துடன் தமிழீழப் போராட்டக் குழுவில் ஆரம்ப காலத்தில் இணைந்தவர்கள் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றவர்களை அநியாயமாக கொலை செய்யப்பட்டவர்களுடைய பட்டியலை தேதி வாரியாக புள்ளி விபரத்துடன் எழுதி அவர்களுடைய மனைவி மக்களை கையேந்த விட்டார் என்று மிகவும் அனுதாபத்துடன் எழுதி இருந்தார்.

முறையானப போர் தந்திரம் வகுக்காமல் போர் முனையில் அநியாயமாக அப்பாவித் தமிழர்கள் சிஙகளப் படையால் கொன்றொழிக்கப்பட்டனர் அதனால் அவர்களுடைய வாரிசுகள் அனாதைகளாக்கப்பட்டனர் என்று கண்ணீர் மல்க எழுதி இருந்தார் நாமும் அதைப் படித்து கண்களை கசக்கிக் கொண்டோம்.

 இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்; டெலோ ஸ்றீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்; பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்; தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்; டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்; தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் - 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக - நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல - முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் - நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் - நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து - தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் - தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.  இவ்வாறு எழுதி இருந்தார். முழுமையாகப் படிக்க   கீழ்காணும் லிங்கை சொடுக்கவும்.         

http://thatstamil.oneindia.in/news/2009/11/18/ltte-s-hasty-decisions-be-blamed.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%29

அவரிடம் நமது கேள்வி ?

பிரபாகரனால் பாதிக்கப்பட்டவர்களை புள்ளி விபரத்துடன் தேதி வாரியாக குறிப்பிட்டு எழுதிய கலைஞர் அவர்களே !

பிரபாகரனால் பாதிக்கப்பட்டவர்களின் துரோகப் பட்டியலில்

  1. அவ்வப்பொழுது முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று வழிப்பறி செய்ததையும் அதை எதிர்ப்பர்களை ஈவிறக்கமின்றி சுட்டுப் பொசுக்கியதும்.

  1. உலகமேப் பார்த்து இவர்கள் இத்தனை அரக்கர்களா ? என்று விமர்சிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து காத்தான்குடி பள்ளிவாசலில் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் பிரபாகரனின் உத்தரவால் பயங்கரவாத புலிகளால் கொடூரமாக சுட்டு வீழ்த்தப்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் அவர்களுடைய மனைவி மக்களை அனாதைகளாக்கி விட்டத் துயரத்தை பற்றி தாங்கள் வாய் திறக்காதது ஏன் ? அது சரி தான் என்று சொல்ல வருகின்றீர்களா ?

  1. பிரபாகரனின் உத்தரவால் 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டு யாழ்பானத்திலிருந்து முஸ்லிம்கள; அவர்களுடைய வீடு> வாசல்களை> கால்நடைகளை> நிலபுலன்களை> தோட்ம்> துறவுகளை கொள்ளையடித்துக் கொண்டு பிறந்த நாட்டில் 24 மணி நேரத்தில் அகதிகளாக்கப்பட்டுத் துப்பாக்கி முணையில் விரட்டி அடிக்கப்பட்ட கொடூரத்தைப் பற்றி வாய் திறக்காதது ஏன் ? அது சரி தான் என்று சொல்ல வருகின்றீர்களா ?

தொப்பி போட்டுக் கொண்டு சேப்பாக்கத்தில் ஓட்டுக் கேட்கும் போது மட்டும் தான் உங்களுக்கு முஸ்லீம்கள் ஞாபகம் வருமா ?

அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் நீங்கள் எழுதும் வரலாற்றுப் பிண்ணனிகளில் முஸ்லீம்கள் ஞாபகம் வராதா ?

அல்லது முஸ்லீம்களையும் அதில் இணைத்து எழுதினால் மதவாதிகளின் ஓட்டுக்கள் சிதறி விடும்; என்ற அச்சமா ?

இதனால் தான் எந்த அரசியல் வாதியானாலும் சரி நம்மிடம் (முஸ்லீம்களிடம்) ஓட்டுக் கேட்டு வந்தால் இந்திய அரசியல் சாஸன சட்டம் நமக்கு வழங்கியதை முறையாக எழுத்துப் பூர்வமாக கேட்டு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோம் என்றுக் கூறுகின்றோம்.


5:8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு> நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க> உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்