வியாழன், மார்ச் 22, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....




விடுதலைப் புலிகளின் பரினாமம்.

பயங்கரவாதப் புலிகளின் தலைவன் பிரபாகரன் கொல்லப்படடதும் (கொல்லப்படவில்லை என்று ஆனித்தரமாக வைகோவும், நெடுமாறனும் கூறி வருகின்றனர்.) இத்துடன் புலிகளின் அட்டூழியம் ஒழிந்தது அப்பாடா என்று இலங்கை அரசும், அப்பாவி மக்களும் நிம்மதிப் பெருமூச்சி விட்டனர். ஆனால் அது தற்காலிக சந்தோஷம் தான் என்பதை சமீப கால அவர்களின் நவடிக்கை நிரூபித்து வருகிறது. 

தனி ஈழம் கோரும் இலங்கைத் தமிழர்களில் அதிகமானோர் ஆரம்பத்திலிருந்தே செல்வம் கொழிக்கும் ஐரோப்பா நாடுகளில் நிலைக் கொண்டுள்ளதை அனைவரும் அறிவர். அரசுக்கெதிரான கலகத்திலும், அரசு ராணுவத்தினருடனான யுத்தத்திலும் ஈடுபடும் ஒருப் பிரிவனர் மட்டுமே இலங்கை காடுகளில் கட்டமைப்பை எற்படுத்திக் கொண்டு பிரபாகரன் தலைமையில் போரிட்டு வந்தனர். பிரபாகரன் கொல்லப்பட்டு இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் போக மீதமிருப்பவர்களில் ஏராளமானோர் அகதிகள் போல் ஐரோப்பா நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தனி ஈழம் கோரும் பிரிவினைவாதிகளுடன் இணைந்து கொண்டனர். 

கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியது நினைவிருக்கலாம். இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியது. 

இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல யுளுஐநுளு  எனும் பத்திரிகை அதிர்ச்சித் தகவலை இப்பொழுது வெளியிட்டுள்ளது. 
இதன் முதல் கட்ட முயற்சியாக இலங்கை சிறையில் உள்ள முன்னால் வெளி விவகார தொடர்பாளர் குமரன் பத்மநாதனை விடுவிக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். குமரன் பத்மநாதன்  கடந்த 2009ல் தாய்லாந்து அரசால் கைது செய்யப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமரன் பத்மநாதன் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளை  சந்தித்து நிதித் திரட்டியும், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்பை வலுப்படுத்தியும் வந்தவர் என்பதால் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டது போல் மீண்;டும் செயல்பட இவரையே தேர்ந்தெடுத்துள்ளனர் அதனால் இவரை விடுவிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது ஒருப் புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டப் புலிகள் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் மேற்காணும் கொலை வெறிப் யபிற்சி தமிழ்நாட்டில் முனைப்புடன் நடந்து வருவதாகவும் மேற்காணும் பத்திரிகை செய்தி கூறுகிறது.

இவர்கள் எல்லாம் திருந்தி மனிதர்களாக வாழவேண்டும் என்பதற்காக இவர்கள் கைது  செய்யப்பட்டதும் ஒரு குவான்டனாமோ சிறைப் போல அல்லது அபுகிரைப் சிறைப் போல அல்லாமல் ஏராளமான மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பயங்கரதவாதப் புலிகள் அனைவரையும் அதில் தங்க வைத்து பிரபல தொழில் நிபுனர்களைக் கொண்டு பல்வேறு மாதிரியான தொழிற்பயிற்சிகள் அளிக்கபட்டு ஒவ்வொருவரும் தங்களை சீர்திருத்தி வாழும்படிக் கூறி வெளியில் அனுப்பினார் ராஜபக்சே.

சமீபத்தில் யுத்தம் நடந்த நாடுகளின் வரிசையில் வெற்றி கொல்லப்பட்டவர்கள் எதிரணியிலிருந்து கைது செய்யப்பட்டவர்களை நடத்திய விதத்தில்; புலிகளுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட விதத்தில் ராஜபக்சே மிளிர்கிறார். ஆனால் புலிகளோ மனிதாபிமனாத்திற்கு அப்பாற்பட்டவள் என்பதை கடந்த காலங்களில் பலதடவை நிரூபித்தவர்கள். 

எது எப்படியோ இலங்கைத் தமிழர்கள் அப்பாடா என்று பெரு மூச்சுவிடுவதற்குள் அடக் கடவுளே என்று அலறும் அடுத்த நிலை உருவாகி வருவமு துரதிஸ்டத்திலும் பெரிய துரதிஸ்டம். வைகோ, சீமானுடைய அரசியல் கட்சி இதன் மூலமாக இன்னும் சூடு பிடிக்கலாம். 

 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்